கடனை கட்டு இல்லையென்றால் சாவு! உன் இறப்பு சான்றிதழை வைத்து பார்த்துக்கொள்கிறேன் ! விவசாயியின் பரிதாப நிலை !

திருச்சி மாவட்டம் குருவம்பட்டியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் இவர் டிராக்டர் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார் . கடந்த காலங்களில் மாதா மாதம் சரியாக
 
கடனை கட்டு இல்லையென்றால் சாவு! உன் இறப்பு சான்றிதழை வைத்து  பார்த்துக்கொள்கிறேன் ! விவசாயியின் பரிதாப நிலை !

திருச்சி மாவட்டம் குருவம்பட்டியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் இவர் டிராக்டர் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார் . கடந்த காலங்களில் மாதா மாதம் சரியாக பணம் செலுத்திவந்த முருகானந்தம் . கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை .

மேலும் விவசாயத்திலும் லாபம் இல்லாமல் போனதால் மிகுந்த பண கஷ்டத்தில் இருந்துள்ளார் . ஊரடங்கு காரணமாக தொழில்களும் முடங்கியுள்ளதால் வெளியில் வேலைக்கும் செல்லமுடியாத சூழல் இருந்துள்ளது . இதனால் அவர் டிராக்டர் வாங்க பெற்ற கடனை செலுத்தமுடியாமல் . அன்றாடம் உணவுக்கே திண்டாட்டமாக இருந்துள்ளது .

ஆனாலும் விடாத தனியார் நிதி நிறுவனம் விவாசியாயின் வீட்டிற்கு ஊழியர்களை அனுப்பி மிரட்ட துவங்கியுள்ளது . தினமும் விவசாயி முருகானந்தத்தின் வீட்டுக்கு வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

கடனை கட்டு இல்லையென்றால் சாவு! உன் இறப்பு சான்றிதழை வைத்து  பார்த்துக்கொள்கிறேன் ! விவசாயியின் பரிதாப நிலை !

முருகானந்தம் வீட்டில் மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் காலையில் வீட்டுக்கு வரும் தனியார் நிதிநிறுவன ஊழியர் மாலை வரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து . விவசாயி முருகானந்தன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் . மேலும் ரவுடிகளை அனுப்பி முருகானந்த்தை மிரட்டிய அந்த நிதி நிறுவனம் டிராக்டரை பறிமுதல் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளது .

மேலும் தற்கொலை செய்துகொள்ளுமாறு முருகானந்தத்தை மிரட்டிய அந்த கும்பல் . நீ தற்கொலை செய்துகொள் உன் இறப்பு சான்றுதலை வைத்து நாங்கள் ஆக வேண்டியதை பார்த்துகொல்லுகிறோம் என்று தற்கொலைக்கும் துண்டியுள்ளனர் . ஒரு கட்டத்தில் இதை செல் போனுக்கு மெசேஜாக அனுப்பியும் உள்ளனர் .

அவர்களின் தொல்லை தாங்க மீடியாமல் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் முருகானந்தம் . இந்த இக்கட்டான காலத்திலும் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் அத்துமீறும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது .

கடனை கட்டு இல்லையென்றால் சாவு! உன் இறப்பு சான்றிதழை வைத்து  பார்த்துக்கொள்கிறேன் ! விவசாயியின் பரிதாப நிலை !

இதுபோன்ற பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த செய்தியை பலருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள் . பலரும் இந்த பிரச்சனையை பற்றி பேசத்துவங்கினாள் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்

Tags