இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய நட்டி ( நடராஜ் )!! 3 மணிநேரத்தில் 7 ட்வீட் ! பெருகும் ஆதரவு !

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது
காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .
மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் . அதனால் வேக வேகமாக அந்த விடீயோக்களை தங்கள் சேனலில் இருந்து டிலீட் செய்து வருகிறது கருப்பர் கூட்டம் .
இது ஒருபுறம் இருக்க சதுரங்க வேட்டை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடராஜ் இவரை நட்டி என்று சுருக்கமாக அழைப்பார்கள் . இவர் கதாநாயகனாக சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் . ஆனால் பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார் . மேலும் இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட .

இப்படி பன்முக தன்மையோடு இயங்கிவரும் நடராஜ் . மிகவும் பிரபலமானது சதுரங்க வேட்டை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு தான் . முருகப்பெருமானின் மிக பெரிய பக்த்தரான இவர் கறுப்பர் கூட்டம் வெளியிட்ட விடீயோக்களை பார்த்துள்ளார் இதனால் மிகவும் மனவேதனையடைந்த இவர் நேற்றிரவு 3 மணிநேரத்தில் 7 டிவீட்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
முதலில் “என் ஜபம்.. கந்தர்ஷஷ்டி கவசம் என்னை காக்கும்…என் வாழ்வு அதனால்….” என்று தனது முதல் டீவீட்டை பதிவிட்ட அவர் தொடர்ந்து பல டிவீட்களை பதிவிட்டதுடன்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது… சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது… சரவணபவாய நமஹ…” என்றும் தனது டீவீட்டில் கூறியுள்ளார் . நட்டியின் இந்த டிவீட்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்