கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணங்களா!!! சாப்பிட்டு பாருங்கள்!!

நமது வீட்டில் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது ஆனால் அதன் மருத்துவ குணங்களை பற்றி நமக்கு தெரியாது.தினமும் நாம் சமையலில் கறிவேப்பிலையை
 
கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணங்களா!!! சாப்பிட்டு பாருங்கள்!!

நமது வீட்டில் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது ஆனால் அதன் மருத்துவ குணங்களை பற்றி நமக்கு தெரியாது.தினமும் நாம் சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம்.அதில் கூட பல மருத்துவ குணங்கள் உள்ளன. கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலையின் நன்மைகள்:

கறிவேப்பிலையின் முக்கியமான மருத்துவ குணம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெருமளவில் உதவுகிறது.முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. இது அனைத்து முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.இதை மூலப் பொருளாக பல பல முடி வளர்ச்சி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

மழை காலங்களில் அதிகமான நபர்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.அப்போது கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சளியை அகற்ற உதவும்.

கறிவேப்பிலை இலையை தொடர்ந்து 10 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் கரைந்து விடும். கறிவேப்பிலை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான மருத்துவ பலன்களை பெறலாம்.எடையை குறைத்து அழகான இடையை பெற உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை மருந்தாக பயன்படுகிறது. தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.

தினமும் காலையில் பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்த சோகை நோயை குணப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

செரிமான பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

Tags