உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க துளசி மற்றும் பால் போதும்!!!

இயற்கையாகவே துளசியில் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.நாம் கோயில்களுக்கு செல்லும் போது சில கோயில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள் அதற்கு காரணம் அதன் மருத்துவ குணங்கள்.பாலில் அதிக
 
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க துளசி மற்றும் பால் போதும்!!!

இயற்கையாகவே துளசியில் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.நாம் கோயில்களுக்கு செல்லும் போது சில கோயில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள் அதற்கு காரணம் அதன் மருத்துவ குணங்கள்.பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தினமும் அதை எடுத்து கொள்ளவது உடலுக்கு நல்லது.அந்த பாலுடன் சிறிது துளசியை சேர்த்து தினமும் குடித்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

துளசி பால் செய்முறை : முதலில் 4-5 துளசி இலைகளை எடுத்து கொண்டு அதை நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.அந்த பாலை வடிகட்டி குடிக்கலாம்.துளசி பாலில் உள்ள முழு சத்துக்களையும் பெற அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்.

துளசி பாலின் நன்மைகள் : துளசி பாலினால் நோய் ஏதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, சளி மற்றும் காய்ச்சலை போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்த்துப் போராட உதவுகிறது.துளசி பால் இருமல், தொண்டைப் புண், சாதாரண சளி போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு தினமும் ஒரு டம்ளர் துளசி பால் கொடுப்பது மிகவும் நல்லது அது அவர்களுக்கு நன்மையை கொடுக்கும். மூளைக்கு ஓய்வு கிடைக்க ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பாலைக் குடிப்பது, நன்றாக உணர வைக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.

ஒரு டம்ளர் துளசி பால் குடித்து பாருங்கள் இதனால் தலைவலி மெதுவாக குறைக்க உதவும்.இந்த துளசி பால் ஒற்றை தலைவலியில் இருந்தும் விடுபடவும் உதவும். துளசி மற்றும் பாலில் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. துளசி பாலில் உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கும். அது சிறுநீரகத்தில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும்.

Tags