இந்த பிரச்சனைய சாதாரணமா நினைக்க வேண்டாம்!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்… உடனே சிகிச்சை எடுங்க!!

வயதான நபர்களுக்கு கை நடுக்கம் என்பது சாதாரண ஒன்று தான். ஆனால் இளைஞர்களுக்கு கை நடுக்கம் என்றால், அலட்சியமாக பார்க்கக் கூடாது. ஏனெனில், அது பிற்காலத்தில் பல்வேறு
 
இந்த பிரச்சனைய சாதாரணமா நினைக்க வேண்டாம்!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்… உடனே சிகிச்சை எடுங்க!!

வயதான நபர்களுக்கு கை நடுக்கம் என்பது சாதாரண ஒன்று தான். ஆனால் இளைஞர்களுக்கு கை நடுக்கம் என்றால், அலட்சியமாக பார்க்கக் கூடாது. ஏனெனில், அது பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை தரும். இந்த கை நடுக்கம் எதனால் ஏற்படுகிறது? உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மைய நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இந்த கை நடுக்கம் ஏற்படுகிறது. இதனை மருத்துவர்கள் எம்எஸ் என்ற வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள். அதேபோல், 

தமனிகளில் ரத்த கட்டு ஏற்படும்போது அது மூளைக்கு அனுப்பும் ரத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. இதன் மூலம் கை நடுக்கம் ஏற்படும். இதை முன்கூட்டியே உணர்ந்து விரைவாக சிகிச்சை அளித்தால் பிற்காலத்தில் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மூளையில் காயம் பாதிப்புகள் ஏற்பட்டாலும் கை நடுக்கம் என்பது இயல்பாக வரும். 

இந்த பிரச்சனைய சாதாரணமா நினைக்க வேண்டாம்!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்… உடனே சிகிச்சை எடுங்க!!

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் கை நடுக்கம் ஏற்படும். இந்த வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் ஒரு பகுதியிலிருந்து நடுக்கம் தொடங்கி, பின்னர் உடல் முழுக்க பரவும். பல சமயங்களில் உணர்ச்சிவசப்படும் நேரங்களிலும் கை நடுக்கம் ஏற்படும் வாய்ப்புண்டு. 

டிஸ்டோனியா பாதிப்பு இருந்தாலும், இந்த கை நடுக்கம் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை உறுப்புகளுக்கு தவறான செய்திகள் அனுப்பப்பட்டு விரும்பத்தகாத இயக்கங்கள் போன்றவற்றை நமது தசைகளில் ஏற்படுத்தும். இது பெரும்பாலும் இளம் வயதினருக்கு ஏற்படும். சாதாரண கை நடுக்கத்தினால் இத்தனை பிரச்சனைகள் இருக்கிறது. 

எனவே இதனை அலட்சியமாக விடாமல், பதட்டத்தினாலும், பயத்தினாலும் நடுக்கம் வந்தால், உளவியல் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். மேலும் மேற்கண்ட நோய்கள் அல்லது காஃபின் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும். 

அதேபோல் மேற்கண்ட நோய்களின் மூலம் நடுக்கம் ஏற்படும் பட்சத்தில், முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், தசைகளின் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நடுக்கத்தை அது குறைக்கும்.

Click  அழுது சிவந்த கண்களுடன் இறந்த தன் குட்டிக்கு முதல் மண் அள்ளிப்போட்டு இறுதிச்சடங்கு செய்யும் (நா)தாய் நெகிழவைக்கும் வீடியோ .

Tags