விக்ரம் படத்தில் ஆ..ஊ..ஆ..ஊ..ஆ..ஊ என்று சத்தம் போட்ட பெண்ணின் வைரல் புகைப்படங்கள்..!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் 200 கோடிக்கு மேல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.இந்த படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளார் லோகேஷ்.


விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாயா கிருஷ்ணன்.இந்த படத்தின் மூலம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றார்.இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தனது பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்துவிட்டு பெங்களூரில் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார்.இவர் இளம் வயதில் இருந்தே ஜிம்னாசியத்தில் போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.


பின்னர் சினிமாவின் மீது ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். தமிழில் வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் சர்வர் சுந்தரம் மற்றும் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் போன்ற சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.


சமீபத்தில் இவர் நடித்த விக்ரம் படத்தின் மூலம் பிரபலமாகி வருகிறார்.இவர் சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த ஆ..ஊ..ஆ..ஊ..ஆ..ஊ… என்ற சத்தத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் மோனிங் சவுண்ட் தான் இப்போ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுமட்டுமல்ல தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வைரல் ஆகி வருகிறது.
