விக்ரம் படத்தில் நடித்த ஸ்வாதிஷ்டா வா இது..!! போட்டோல சும்மா கும்முன்னு இருக்காங்களே!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளங்கள் நடித்திருந்தாலும்
கமலின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.


இவர் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் எஸ்டி ஜான் பள்ளியில் முடித்தார்.பின்னர் இவர் மெட்ராஸ் யூனிவர்செட்டில் ஜெனலிஸ்சம் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக
பணியாற்றி வந்தார்.பின்னர் மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடினார்.இவர்பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.


ஸ்வாதிஷ்டா 2018 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சவரக்கத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு
ஜீவா ஹீரோவாக நடித்த கீ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் இவர் புதுமுக இயக்குனர் ரஜினி இயக்கத்தில் மதம் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.


தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் குண்டே கத வின்டரா என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.இவர் சினிமா வாய்ப்பை பெற அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த விக்ரம் படம் வெற்றி பெற்றது. இவரின் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

