SPB அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மற்றும் டெல்லி அணியின் வீரர்கள் செய்த செயல் !

பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . கொரோனா நெகடிவ் என்று வந்தாலும் நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததால் இன்று மதியம் ஒரு மணியளவில் SPB அவர்களின் உயிர் பிரிந்தது .
தமிழக மக்கள் மற்றுமின்றி உலகம் முழுவதும் உள்ள SPB யின் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த செய்தி . SPBயின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி , குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த என பல முக்கிய அரசியல் தலைவர்களும் . நடிகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் .

SPB அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடும் சென்னை மற்றும் டெல்லி அணியின் வீரர்கள் தங்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் .

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி இன்று நடந்துவரும் நிலையில் SP பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்த போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்களது கையில் கருப்பு நிற பட்டையை அணிந்து விளையாடுவருகின்றனர்