பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் ஈட்டிய சூரரைப்போற்று ! ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று தெரியுமா ?

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவான சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
 
பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் ஈட்டிய சூரரைப்போற்று ! ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று தெரியுமா ?

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவான சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியே திரையரங்கில் வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா தொற்று காரணமாக வெளியிடமுடியாமல் போனது .

நாட்கள் நீண்டுகொண்டே செல்வதால் படத்தில் முதலீடு செய்தவர்களின் நலன்கருதி ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளார் சூர்யா . இந்த சூரரைப்போற்று திரைப்படத்தின் பட்ஜெட் 20 கோடி ரூபாய் . இது சூர்யாவின் சொந்த தயாரிப்பு இருந்தாலும் அவர் முந்தைய படத்திற்கு வாங்கிய சம்பளமான 25 கோடியையே இந்த படத்தின் சம்பளமாக எடுத்துக்கொண்டாலும் படத்தின் மொத்த செலவு 45 கோடி ரூபாய் .

பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் ஈட்டிய சூரரைப்போற்று ! ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று தெரியுமா ?

இப்போது படத்தின் வியாபாரத்தை பார்க்கலாம் இந்த சூரரைப்போற்று படத்தை 45-50 கோடிக்கு வாங்கியுள்ளது அமேசான் பிரைம் நிறுவனம் . இந்த படத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை 15 கோடிக்கு பெற்றுள்ளது சன் தொலைக்காட்சி .

மேலும் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் 10 கோடிக்கும் ஹிந்தி ரீமேக் உரிமம் 10 கோடிக்கும் விற்பனைசெய்யப்பட்டுள்ளது . வெளிநாடுகளில் படத்தை ஒளிபரப்பும் உரிமம் 10 கோடி வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது . இது தவிர தெலுங்கு ரீமேக் உரிமையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன் தொகை வெளியாகவில்லை .

மொத்தமாக பார்த்தால் இந்த திரைப்படம் 100 கோடி வியாபாரம் செய்துள்ளது . சூர்யாவின் சொந்த தயாரிப்பு என்பதால் அவரின் சம்பளத்தை சேர்க்காமல் பார்த்தால் 20 கோடிக்கு எடுக்கப்பட்ட சூரரைப்போற்று 100 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது .

பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் ஈட்டிய சூரரைப்போற்று ! ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று தெரியுமா ?

இந்நிலையில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி யில் வெளியாகும் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி நாளன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது . திட்டமிட்டபடி ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகியிருந்தால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தினத்தன்று இந்த படத்தை ஒளிபரப்ப சன் டிவி திட்டமிட்டிருந்தது

ஆனால் அது நடக்கமால் போனதால் தீபாவளிக்கு நிச்சயம் படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் . தீபாவளிக்கு படத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்து தாருங்கள் இல்லையென்றால் 15 கோடியை திருப்பி கொடுத்துவிட்டு . தொலைக்காட்சி உரிமத்தை வேறுயாருக்காவது விற்றுக்கொள்ளுங்கள் என்று சன் தொலைக்காட்சி சூர்யாவிடம் கூறியதால் தான் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை சூர்யா எடுத்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது .

பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் ஈட்டிய சூரரைப்போற்று ! ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று தெரியுமா ?

இது ஒருபுறம் இருக்க சூரரைப்போற்று தான் ஓடிடி யில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படம் இதற்காக அமேசான் பிரைம் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags