நீச்சல் குளத்தில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை ஷெரின்!! வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ”துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். துள்ளுவதோ இளமை படத்திற்கு பின் இவர் நடித்த படம் “விசில்” அந்த படத்தில் ”அழகிய அசுரா ” என்ற பாடலின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அதற்கு பின் அவர் பல படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு சரியாக போகவில்லை. ஷெரின் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் இல்லாமல் மாடலிங் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.தெலுங்கிலும் தன் அழகால் ரசிகர்களை வளைத்து போட்டார் .பின்பு அவரின் சொந்த காரணத்தினால் படங்களில் நடிக்காமல் இருந்தார்.இதனால் பட வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தார்.

பல வருடங்கள் கழித்து தமிழில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். ரசிகர்கள் அனைவரும் ஷெரின் ரிட்டன் என்று கூறினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார் . இதனால் ஷெரினுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தன் உடல் எடையை முழுவதும் குறைத்து விட்டார்.

பின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் படங்களில் அதிகமாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த அளவிற்கு படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் படங்களின் வாய்ப்புக்காக எதிர்பார்த்து கொண்டிருந்தார். பட வாய்ப்புக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


