கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை சாய் பல்லவி..!! ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில் பிறந்தார்.சாய் பல்லவி வளர்ந்தது,கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர். சாய் பல்லவி சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தார்.

சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த ஆசையால் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடனநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுமட்டுமல்ல 2009 ஆண்டு இ.டி.வி. தெலுங்கில் “தி அல்டிமேட்டு டேன்சு” நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் 2015 ஆண்டு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் அதில் டீச்சர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். சாய் பல்லவியின் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். பிரேமம் படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதையடுத்து தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த “தியா” படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.பின் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி-2” மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “என்.ஜி.கே” போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அழகா என்று வர்ணித்து வருகின்றனர்.