400 கோடிக்கு ஆப்பு வைத்த நடிகர்கள்.. அந்தரத்தில் தடுமாறும் RRR படம்: இயக்குனருக்கு அடிமேல் அடி.!!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜமவுலி. தெலுங்கு சினிமாவை உலகமெங்கும் பெருமைப்படுத்தியவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
ராஜமௌலி(Rajamouli)யின் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் RRR. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாகி வருகிறது.

கொரோனாவுக்கு பயந்து நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்கள் இந்த படத்தில் அதிகம் நடித்து வருவதால் மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் நடிக்கக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாற்று நடிகர்களுக்கு என்ன செய்வது என புரியாமல் விழித்து வருகிறாராம்.
ஏற்கனவே 75 சதவிகித படப்பிடிப்பை பாலிவுட் நடிகர்களை வைத்து முடித்துவிட்டு தற்போது மாற்று நடிகர்களை வைத்து மீண்டும் எப்போது படத்தை மொத்தமாக முடிப்பது என கவலையில் இருக்கிறாராம் ராஜமவுலி.

அதுமட்டுமில்லாமல் சொன்ன பட்ஜெட்டை விட 200 கோடி வரை அதிகமாக செலவாகும் என தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அவர்களிடமும் நல்ல உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவதில்லை.
எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ராஜமவுலி. அதோடு இனி பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டாராம்.