ஏன் வதந்தி பரப்புகிறீர்கள் பாடகி ஜானகி வேதனை!

வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுவதாக பாடகி ஜானகி அவர்கள் ரசிகர் ஒருவருடன் பேசும் போது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இன்று வரை பார்க்கப்படுபவர் ஜானகி.
 
ஏன் வதந்தி பரப்புகிறீர்கள் பாடகி ஜானகி வேதனை!

வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுவதாக பாடகி ஜானகி அவர்கள் ரசிகர் ஒருவருடன் பேசும் போது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இன்று வரை பார்க்கப்படுபவர் ஜானகி. இவர் 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என்று அழைக்கப்படும் இவர் நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகளையும் பெற்றவர்.

கடந்த 2013-ம் ஆண்டு இவரது சாதனைக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. கடந்த 2016-ஆம் ஆண்டில் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு தனது மகனுடன் ஹைதராபாத்தில் வாழ்த்து வருகிறார் பாடகி ஜானகியம்மாள்..

கடந்த சில வருடத்திற்கு முன்னரும் இதே போன்ற ஒரு வதந்தி ஜானகி அவர்களை பற்றி பரவியது. அப்போதே அவர்கள் குடும்பம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

இதனிடையே ரசிகர் ஒருவருடன் பாடகி ஜானகி அம்மா அவர்கள் இன்று (ஜூன் 28) பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் ” பலரும் போன் போட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” இது முதல் முறை அல்ல 6 முறை இது போன்ற வதந்தி பரவி உள்ளது. சும்மா இப்படி தேவையின்றி வதந்தி பரப்புவது நிறுத்துங்கள்..

இந்த மாதிரி வதந்தி ஏற்கனவே பரவிய நிலையில் இதே போன்று வாட்ஸ் ஆப்பில் பேசி நலமுடன் இருக்கிறேன் என்று கூறினேன்.

சிலருக்கு இப்படிப்பட்ட செய்திகளை கேட்டால் அதர்ச்சியில் உடல்நிலை பாதிக்கக் கூடும். தயவு செயது இது போன்ற பொய் வதந்தியை பரப்பி என்னை கொலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Tags