சத்தமில்லாமல் திருமணம் செய்த நந்தினி சீரியல் நடிகர்..!!அதுவும் பொண்ணு யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நந்தினி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் ராகுல் ரவி.கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

ராகுல் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.இவர்
பிடெக் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு 2013 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.பின் தொடர்ந்து சினிமாவில் சான்ஸ் தேட ஆரம்பித்தார்.சான்ஸ் தேடும் போது மலையாள சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியல் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார்.அப்போது நந்தினி சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியல் மிக பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் “சாக்லேட்” சீரியலில் நாயகனாக நடித்தார்.பின் கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்து வருகிறார்.

இவர் தனது திருமணத்தை பற்றி அறிவித்தார்.பின் கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது.இவர் சீரியல் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாடலிங் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி நாயரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார். ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

