ஒரு லட்சம் மின் கட்டணமா கொதிக்கும் பிரபல நடிகை!

நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவர். “கோ” படத்தை
 
ஒரு லட்சம் மின் கட்டணமா கொதிக்கும் பிரபல நடிகை!

நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவர். “கோ” படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் பிரச்சனை உள்ளது.

பின்னர் கணக்கிடப்பட்ட மின் கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

மும்பையில் வசித்து வரும் நடிகை கார்த்திகா நாயர் ஜூன் மாத மின் கட்டணம் அதிகமாகி இருப்பது தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் பதிவு செய்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில முதல்வரை டேக் செய்து இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, “

இது என்ன விதமான மோசடி ஜூன் மாதத்தின் மின் கட்டணம் மட்டுமே ஒரு லட்சம் எப்படி இப்படி ஒரு கணக்கீடு செய்துள்ளீர்கள். மும்பையில் வசிக்கும் பலரும் இது போன்ற மின் கட்டண உயர்வு பற்றி என்னிடம் கூறியுள்ளார்கள்.
குத்து மதிப்பாக மீட்டர் கணக்கீடு இல்லாமல் எப்படி இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை அதிகமாக காட்டுகிறீர்கள்” என புகார் தெரிவித்தார்.

Tags