துணிவு பட வில்லன் மனைவி இவரா?வைரல் ஆன புகைப்படங்கள்

சார்பட்டா பரம்பரை மற்றும் துணிவு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன். பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் சார்பட்டா பரம்பரை மூலமாக கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் அவர் நடித்த வேம்புலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவரை நிலைபெற வைத்தது.
இதையடுத்து தற்போது துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக மோசடி செய்யும் வங்கி உரிமையாளராக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் இப்போது பிரபல நடிகராகியுள்ளார்.
`இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் ம்யூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் என்பவரை மணந்துகொண்டார். இவரும் அந்தகாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இப்போது பூஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
கர்ப்பகால போட்டோஷூட் என்பது இப்போது பிரபலங்களின் வாடிக்கையான ஒன்றாகியுள்ளது. அந்த வகையில் பூஜாவும், ஜான் கொக்கனும் எடுத்து வெளியிட்டுள்ள கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.