இந்த குழந்தை யாருன்னு தெரியுதா..? தற்போது இவர் பிரபல நடிகை!! இவரின் புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.இவர் 1986 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின் இவருக்கு 16 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான”நம்மல்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.பின் 2006 ஆண்டு தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் “வெயில்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து “தீபாவளி”, “ஜெயம் கொண்டான்” மற்றும்”அசல்” போன்ற படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

பாவவனா தமிழில் கதாநாயகி வேடத்தில் மட்டுமல்ல நடிகர் மாதவனுக்கு லவ் டார்ச்சர் செய்யும் வில்லியாக “ஆர்யா” படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.பின்னர் 2010 ஆண்டு கன்னட சினிமாவில் “ஜாக்கி” படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான நவின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தொழிலதிபர் மற்றும் கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். நடிகை பாவனா கன்னட படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கைவசம் நிறைய கன்னட படங்கள் உள்ளது.தற்போது பாவனாவின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
