ஆட்டோகிராப் படத்திற்கு பின்னர் விஜய்யோடு இணையும் வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டேன் இயக்குனர் சேரன்.

நடிகர் விஜய் அளித்திருந்த பழைய பேட்டி ஒன்றில் ஆட்டோகிராப் படம் குறித்து புகழ்ந்து பேசி இருந்தார் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த ஆட்டோகிராப் கதைகளையும் விஜய் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் பதிவிட அதனை குவாட் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்

“ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . அப்போது நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்த தவறை அப்போது நான் செய்திருக்க கூடாது. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என்று நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் இப்போது உணர்கிறேன்.

இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய்யை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். இதனை நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்” என்று கூறி பதிவிட்டுள்ளார்…

Tags