பிக் பாஸ் லாஸ் லியாவின் தந்தை திடீர் மரணம் ! நள்ளிரவில் நடந்த சோகம் !

தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன்.லாஸ்லியா மார்ச் மாதம் 23 ஆம் தேதி 1996 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 24 வயதாகும்.லாஸ்லியாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்
இலங்கை தமிழரான இவர் இலங்கையில் ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது . கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா

இப்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகிவரும் பிரென்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் . இந்நிலையில் தான் நேற்றிரவு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென உயிரிழந்திருப்பது அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி . லாஸ் லியாவுக்கு நெருக்கமானவர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .