உங்க கவர்ச்சிக்கு எல்லையே இல்லையா.?காடனில் கவர்ச்சி காட்டிய நடிகை அனு இம்மானுவேல்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்
நடிகை அனு இம்மானுவேல். இந்த படத்தை பாண்டிராஜன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஃபேமிலி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


இவர் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சசில் பிறந்தார். ஆனால் இவரின் சொந்த ஊர் கேரளா. இவர் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே சுவப்னா சஞ்சரியில் என்ற மலையாள திரைப்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் உயர்நிலைப்பள்ளி படிப்பை அமெரிக்காவில் முடித்தார்.இவர் உயர்பள்ளியில் படிக்கும் போதே துல்கர் சல்மானுடன் சார்லீ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் தேர்வுகள் காரணமாக நடிக்க முடியவில்லை.


பின்னர் இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு நிவின் பாலி ஹீரோவாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் மீண்டும் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.இவர் அமெரிக்காவில் உளவியலில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான மஞ்சு படத்தில் நடித்தார். இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நா பேரு சூர்யா படத்தில் நடித்தார்.


கடைசியாக தெலுங்கில் மஹா சமுத்திரம் படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் ப்ரேமா கடந்த, ராவணசுரா படத்தில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் இவன் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராமில் முன்னழகை காட்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

