தம்பியின் பிறந்தநாளில் ஆச்சர்யமான சர்ப்ரைஸ் தந்த நடிகர் ராகவா லாரன்ஸ் !

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சகோதரர் எல்வின் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள் இந்த பிறந்தநாளை முன்னிட்டு ராகவா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தம்பியின் பிறந்தநாள். இந்த
 
தம்பியின் பிறந்தநாளில் ஆச்சர்யமான சர்ப்ரைஸ் தந்த நடிகர் ராகவா லாரன்ஸ் !

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சகோதரர் எல்வின் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள் இந்த பிறந்தநாளை முன்னிட்டு ராகவா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தம்பியின் பிறந்தநாள். இந்த நாளில் ஒவ்வொரு வருடமும் நான் அவரை ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவருக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு தான் இது”.

“அவரது கனவே ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் காத்திருந்த அந்த நல்ல நாள் தற்போது தான் அமைந்துள்ளது.
ஒரு நல்ல கதை தற்போது அமைந்துள்ளது. இதனை ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். தம்பி எல்வின் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
தற்போதைய கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின்னர் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதரவையும் எனது தம்பி எல்வின்க்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்”.
இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவரான ராகவா லாரன்ஸ், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், என பன்முகம் கொண்டவராக இருப்பாவர். தொண்டு நிறுவனம் மூலம் என்னற்ற சமூக பணியையும் இவர் செய்து வருகிறார். மக்களிடம் நல்ல பெயரை கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags