ஸ்லீவ் லெஸ் உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா கவுடா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை
நேஹா கவுடா.இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கேபிஒய் புகழ் நவீன் மற்றும் நேஹா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இதில் குணவதி என்ற கேரக்டரில் ரவுடி பேபியாக கலக்கி வருகிறார். இவரினா துணிச்சலான அழகான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


இவர் 1990 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட்.
இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்
சிறு வயதிலிருந்தே டான்ஸ் முறையாக கற்றுக்கொண்டார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றினார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் பி.காம் படிக்கும் போதே மாடலிங் செய்து வந்தார்.

பிறகு 2013 ஆம் ஆண்டு ஸ்வாதி சினுகுலு என்ற கன்னட சீரியலில் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் நேஹா. இவர் முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றார்.பிறகு சன் தொலைக்காட்சியில்
கல்யாண பரிசு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கல்யாணப்பரிசு காயத்ரியாக தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார்.இவர் கன்னடத்தில் லட்சுமி பரமா சீரியலில் நடித்தார்.

இவர் 2018 ஆம் ஆண்டு தனது காதலரான சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது பாவம் கணேசன் சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.
இதுமட்டுமல்ல சூப்பர் சேலஞ்ச், தகதிமிதா போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தற்போது இவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இவருக்கு அழகே அந்த உதடுக்கு கீழ் உள்ள ஒரு மச்சம் தான் அதைவிட ஸ்லீவ் லெஸ் உடையில் மரத்தில் சாய்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கொடுத்துள்ளார்.

