பள்ளி படிக்கும்போதே பிரபலம் ! 15 லட்சம் பாலோவர்ஸ் ! 16 வயதிலேயே தற்கொலை !

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு திறமை இருந்தால் எளிதில் பிரபலமாகலாம் அதற்கான வாசலை சமூக வலைத்தளங்கள் திறந்துவிட்டுள்ளது . இப்படி சிறு வயதிலேயே தனது நடனம் மூலம் டிக்
 
பள்ளி படிக்கும்போதே பிரபலம் ! 15 லட்சம் பாலோவர்ஸ் ! 16 வயதிலேயே தற்கொலை !

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு திறமை இருந்தால் எளிதில் பிரபலமாகலாம் அதற்கான வாசலை சமூக வலைத்தளங்கள் திறந்துவிட்டுள்ளது . இப்படி சிறு வயதிலேயே தனது நடனம் மூலம் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர் ஷியா காக்கார் .

இவருக்கு டிக் டாக்கில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர் . இன்ஸ்டாகிராமில் இவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர் . 16 வயதே நிரம்பிய ஷியா மிக இளம் வயதில் தன் சொந்த முயற்சியால் பிரபலமானவர் . அவர் மிகவும் பிரபலமான நிலையில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது .

ஆனால் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு திரைத்துறையில் நுழைய திட்டமிட்டுள்ளார் . ஆனாலும் இப்போது சில விளம்பரங்களில் நடித்துள்ளார் மேலும் பல விளம்பர வாய்ப்புகள் இவரை தேடி வந்தவண்ணம் இருந்துள்ளது . இந்நிலையில் தான் ஷியா இன்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

ஷியா வின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துக்குள்ளும் அவரின் மேலாளர் அருண் ஷெரினி இதை உறுதிப்படுத்தியுள்ளார் . மேலும் அவர் கூறும்போது நேற்று நடந்த விளம்பர ஷூட்டிங்கில் ஷியா நன்றாக தான் இருந்தார் அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை . அவள் தற்கொலை செய்திகொண்டாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார் .

மேலும் ஷியாவின் குடும்பத்தினர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சோகத்தில் முழ்கியுள்ளதால் . மேலாளர் அருண் காவல்துறைக்கு விவரங்களை அளித்துவருகிறார் .

குடும்பத்தினர் உதவியுடன் ஷியாவின் செல்போனை ஆய்வு செய்ய காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர் , மேலும் ஷியாவின் பள்ளி தோழிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் .

Tags