நீச்சல் குளத்தில் செய்யுற வேலையா இது..? கட்டழகு மாறாமல் காட்டிய நடிகை நவ்யா நாயர்!!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நவ்யா நாயர். இவர்
2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் இஷ்டம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து கல்யாண ராமன், நந்தனம் என பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.

இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார்.
இவர் பள்ளியில் படிக்கும் போதே திலீப் நடிகருக்கு கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் வணிக மேலாண்மை துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் நடித்த நந்தவனம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரளா விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.பின்னர் தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள்,ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி, சில நேரங்களில், போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு
டிவி நிகழ்ச்சிகளிலும் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் கட்டழகு மாறாமல் இருக்கீங்க என்று எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
