க்ளாமர் ரூட் எடுக்கும் நடிகை அபர்ணா..!! மாடர்ன் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!!
நடிகை அபர்ணா 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.
இவர் தனது கல்லூரி படிப்பை க்ளோபல் இன்ஸ்டிடியூட்டில் ஆர்க்கிடெக்சர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் பரதநாட்டியம், மோகியாட்டம்,
குச்சிப்புடி என பாரம்பரிய நடனங்களை கற்றுள்ளார்.இவர் மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு ஸ்சேகண்ட் க்ளாஸ் யாத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் இவர் மகேசிண்ட் பிரதிகாரம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் ஜிம்ஸி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் சண்டே ஹாலிடே படத்தில் அனு கதாபாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பேசப்பட்டார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார்.


இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.பின்னர்
தமிழில் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இவர் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இந்ல படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.இந்த படத்தில் சூர்யா, அபர்ணா நடிப்பு திறமையை பேசப்பட்டது.


இவர் கடைசியாக தமிழில் தீதும் நன்றும் படத்தில் நடித்திருந்தார்.தற்போது ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார்.பின்னர் நித்தம் ஒரு வானம் மற்றும் பல மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
