இதுவரை பலரும் பார்த்திராத மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் அரிய குடும்ப புகைப்படங்கள்!!

திரைப்பட நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ( 19/02/2023) அன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
அந்த நாள் அதிகாலை 3 மணி வரை சிவராத்திரி பூஜைகளில் ஈடுபட்டிருந்த இவர்.. வீடு திரும்பிய சில மணிநேரத்தில் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1965 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பகுதியில் பிறந்த மயில்சாமி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தாவணி கனவுகள் படத்தின் மூலம் கூட்டத்தில் ஒருவராக முதல் முதலில் நடித்தார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்.
காமடி நடிகராகவும் . குணச்சித்திர வேடத்திலும் நடித்த இவர் நடித்த பல காமடி காட்சிகள் என்றும் அழியாதவை. குறிப்பாக மயில்சாமி மற்றும் சின்ன களைவர் விவேக் சேர்ந்து அசத்திய காமடிகள் எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை தூண்டும்.
மயில்சாமி அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பு. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமி அவர்களின் சில குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக . இந்த பதிவில்.