மறைந்த நடிகர் மனோபாலாவின் இதுவரை பார்த்திராத பல அரிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே

நடிகர் மனோபாலா இன்று ( 3-5-2023) அன்று மாரடைப்பால் காலமானார் . மனோபாலாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றுமின்று . தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 700 படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோபாலா. 1953 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தவர். 1970 களின் பிற்பகுதியில் சினிமாவில் சேரும் ஆர்வத்தில் சென்னை வந்த இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இணைந்தார்.
பின்னர் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த மனோபாலா நடிப்புடன் சேர்த்து இயக்குநராகவும் பணியாற்ற துவங்கினார்.
முதல் முதலாக 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற படத்தை இயக்கினார் மனோபாலா. தொடர்ந்து பல படங்களில் நடித்த மனோபாலா இதுவரை 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அவர் நடித்த காமடி கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
நடிகர் இயக்குநர் என்று மட்டும் இல்லாமல் . 2014 ஆம் ஆண்டு சதுரங்கம் வேட்டை படத்தை தயாரித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பின்னர் பாம்பு சட்டை என்ற படத்தை தயாரித்தார்.
இப்போது சதுரங்க வேட்டை 2 படத்தை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார் மனோபாலா. அதற்குள் இவரது இறப்பு என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவருக்கு உஷா என்ற மனைவியும். ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். மனோபாலாவின் மகன் ஹரிஷ்சுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை பலரும் பார்த்திராத மனோபாலாவின் அரிய குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.