07-08-2020 இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்க பலன்கள் ! இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா ?

07-08-2020, ஆடி 23, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் #சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு_காலம் -பகல் 10.30-12.00,
எம_கண்டம் -மதியம் 03.00-04.30,
குளிகன் -காலை 07.30 -09.00,
சுப_ஹோரைகள் காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய_ராசிப்பலன்
aries-மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் தலையீட்டால் திருமண முயற்சிகளில் இடையூறு ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.
taurus-ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.
gemini-மிதுனம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.
cancer-கடகம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
leo-சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.
virgo-கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
libra-துலாம்
இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இந்த நாள் இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும்.
scorpio-விருச்சிகம்
இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்ய வேண்டி வரும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
sagittarius-தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளியிலிருந்து கிடைக்க வேண்டிய தொகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
capricorn-மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் நட்புடன் செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிட்டும்.
aquarius-கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும்.
pisces-மீனம்
இன்று நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு தேடி வரும்.
தினமும் காலை 5 மணிக்கு நமது பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன்கள் வெளியாகும் . தினமும் தவறாமல் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி நமது Tamil Today பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்