63 பேர் மரணம் ! இந்திய சீன எல்லையில் நடந்தது என்ன ?தற்போது வெளியான முழு விவரம்

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு
 
63 பேர்  மரணம் ! இந்திய சீன  எல்லையில் நடந்தது என்ன ?தற்போது வெளியான முழு விவரம்

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை அடுத்து இரு நாட்டு படைகளும் பின்வாங்க துவங்கினர் , லடாக் எல்லையில் 2.5 கிலோமீட்டர் வரை ஊடுருவியிருந்த சீன ராணுவம் திரும்பிச்செல்லுமாறு கூற ஒரு கர்னல் மற்றும் சில வீரர்கள் சென்றனர் பேச்சு வார்த்தை நடத்த சென்ற அவர்களை சுற்றி வளைத்த சீன ராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளனர்

இந்த தகவல் இந்திய நிலைக்கு சென்றதும் அவர்களுக்கு உதவ 50 தற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வந்துள்ளனர் . அப்போது சீன வீரர்களும் அங்கு கூடியதால் மிக பெரிய கலவரமே நடந்துள்ளது . இதற்காகவே தயாராக இருந்த சீன ராணுவத்தினர் இரும்புக்கம்பிகளால் கொடூரமாக தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர் . 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்திய வீரர்கள் பதிலுக்கு அவர்களை நேருக்கு நேர் தாக்கியதில் 43 சீன ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நமது வீரர்கள் நேருக்கு நேர் எதிரிகளை சந்தித்தலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்துள்ள நிலையில் . நம்மை விட இருமடங்கு இழப்பை சீன ராணுவத்திற்கு ஏற்படுத்தி தங்கள் வீரத்தை நிரூபித்துள்ளனர் .

இது போன்ற பல முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Tags