லடாக் எல்லையில் பதற்றம் 3 இந்தியா வீரர்கள் வீர மரணம் – அத்துமீறும் சீனா
கடந்த பல நாட்களாக இந்தியா – சீனா எல்லையில் தீவிர பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு மூலம் தங்களது நாட்டின்
Jun 16, 2020, 14:08 IST

கடந்த பல நாட்களாக இந்தியா – சீனா எல்லையில் தீவிர பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு மூலம் தங்களது நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களை திரும்பப்பெற முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் “நேற்று இரவு படை வீரர்களை திரும்ப பெரும்பொழுது இந்தியா வீரர்கள் அத்துமீறியதாகவும், அதனால் சிறிது கைகலப்பு ஏற்பட்டது என்றும் சீனா குற்றம்சாட்டியுள்ளது”. இதில் இந்தியா நாட்டை சேர்த்த 1 ராணுவ அதிகாரியும், 2 படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவரும் ஒருவர் என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.