முதல் நாளிலேயே அணைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கொரோன ஊரடந்கு படி படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சுமார் 78 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 8 ஆம் தேதி திங்களன்று திருமலை திருப்பதி திருக்கோவில் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக
 
முதல் நாளிலேயே அணைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

கொரோன ஊரடந்கு படி படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சுமார் 78 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 8 ஆம் தேதி திங்களன்று திருமலை திருப்பதி திருக்கோவில் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 2 நாட்கள் சோதனை முறையில் உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் வெளியூர் வாசிகளுக்கு தரிசனம் தொடங்கப்படும் என்று அறிவித்தது.

இதில் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 6000 பகதர்கள் வரை அனுமதிகிக்கப்படுவர் என்றும் அதில் 3000 டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் 3000 டிக்கெட் நேரில் வருபவர்களுக்காக ஒதுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூன் மாதம் 19 ஆம் தேதிவரை தரிசனத்திற்காக ஆன்லைன் டிக்கெட் பதிவு திறக்கப்பட்டது, முன்பதிவு தொடங்கிய நிலையில் பக்த்தர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது, ஜூன் மாதம் 19 ஆம் தேதிவரை இருந்த அணைத்து ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

Tags