மகனுக்கு வில்லனாகிறார் நடிகர் விக்ரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் விக்ரம் 60 படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனோ தாக்கம் காரணமாக இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடையவில்லை.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் அப்பா – மகன் இணைந்து ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால், இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தபடத்தில் நடிக்கும் சியான் விக்ரம் அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தபடத்தை 7 Screen லலித்குமார் அவர்கள் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தயாரிப்பு நிறுவனமோ அல்லது படக்குழுவோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

படத்தில் விக்ரம் வில்லனாக நடிப்பதால் தந்தையே மகனுக்கு எதிரியாக நடிப்பது உறுதியாகி உள்ளது..

Click  முன்னழகை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் மீசையை முறுக்கு பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.