மாடர்ன் உடையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்கா..!!வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியங்கா குமார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்தார். இவருக்கு நடிப்பின் மீது உள்ள அதிக ஆர்வத்தால் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பின்னர் மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்து முடித்தார்.
இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானார்.இதை தொடர்ந்து கன்னட சின்னத்திரையில் நடிக்க பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி சீரியலில் துளசி கேரக்டரில் நடித்தார்.

கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான ராதா ரமணா தொடரில் பிங்க்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தார் பிரியங்கா.பின்னர் சன்டிவியில் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியலில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிரியங்கா தனது மார்டன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விட்டு வருகிறார்.இவரின் மாடர்ன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Click  ட்ரான்ஸ்பரன்ட் உடையில் மொத்தமாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜ்..!!

Leave a Reply

Your email address will not be published.