பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்!!

கடந்த 2010 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாஸ் என்ற பாஸ்கரன். இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.இந்த படத்தை ஆர்யா மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தயாரித்து இருந்தனர்.

இந்த திரைப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தன்னுடைய மிரட்டலான காமெடியை இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்திருந்தார். இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு சந்தானத்தின் காமெடி முக்கியமான காரணமாக அமைந்தது.இந்த திரைப்படம் சந்தானத்திற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருதினை பெற்று தந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் நடிகை மோனிஷா. இந்த திரைப்படத்தில் இவரை பார்த்த போது பலருக்கு இவரை எங்கேயோ பார்த்தது போல நியாயம் வரும்.அதற்கு காரணம் பாஸ் என்ற பாஸ்கரன் படத்திற்கு முன்பாகவே டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தான் பாஸ் என்கின்ற பாஸ்கரன் நடித்தார் மோனிஷா.

தற்போது கேம் ஷோக்கள்,பிரபலங்களின் விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இறுதியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பான கில்லாடி ராணி என்ற கேம் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவருக்கு தற்போது திருமணம் கூட முடிந்துவிட்டது.தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் இவரா இப்படி..!! தொடை கவர்ச்சி காட்டும் காவ்யா!!

Leave a Reply

Your email address will not be published.