அழகில் ரோஜாவையே தூக்கி சாப்பிடும் அவரது மகள் 😍 காட்டுத்தீ 🔥 போல் வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் நடிகை ரோஜாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. 80 90 காலகட்டங்களில் வலம் வந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பலமுறை ஜோடி போட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். பின்னர் பெப்ஸி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்திவரும் ரோஜா அங்கு ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சமூக சேவைகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுட்டிப்பெண் போலிருந்த ரோஜாவின் மகள் அன்ஷு மல்லிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிக்கிறார். பளபள வென இருக்கும் அவரது புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

ஆனால் கண்டிப்பாக ரோஜாவின் மகள் சினிமாவுக்கு வர மாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *