என்ன கலாச்சாரம்:பாதி கடவுள் ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கவங்க தான்… வனிதா வெளியிட்ட காணொளி.!!

பிக் பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண பிரச்சனை தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதா கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் பீட்டரின் மனைவி, தனக்கு விவாகரத்து கொடுக்காமல் பீட்டர் திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னை திட்டி தீர்க்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 10 கோடி பேர் இருக்கும் தமிழ் நாட்டில் ஒரு 10 பேராவது மனைவியை தவிர வேறு ஒருவனுடன் உறவில் இல்லையா என்ன ? பீட்டருக்கு 41 வயதாகிறது எனக்கு 39 வயதாகிறது இப்போது போய் நான் மாற்றிமோனியில் 25 வயது பையனயா திருமணம் செய்து கொள்ள முடியும்.

தயவு செய்து கலாச்சாரம் பத்தி பேசாதீங்க, நாம கும்பிடறஎத்தனையோ சாமி ரெண்டு பொண்டாட்டி காரங்க தான். இப்போ நடக்கற இந்து திருமணத்தில் கூட மாஸ்க் போட்டுகொன்டு திருமணம் செய்து கொள்கிறார்கள் அது தான் இந்து கலாச்சாரமா என்று கூறியுள்ளார். மேலும், பீட்டர் பாலுக்கு குடி பழக்கமே கிடையாது, திருமணத்தில் அவர் குடித்தது கூட ஆல்கஹால் இல்லாத வைன் தான் குடித்தார் என்று பேசியுள்ளார் வனிதா.

இதனால் என்னை பற்றி தவறாக கமன்ட் செய்பவர்கள் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்க. நீங்களா என் குடும்பத்தை பார்த்துக்க போறீங்க. இப்போ இது தான் உங்களுக்கு பிரச்சனையா ? என் குழந்தைகளை பார்த்துக்க எனக்கு தெரியும். என் புள்ளைங்க தான் எனக்கு முக்கியம். உங்க புள்ளைங்க உங்க பேச்சை கேட்கலான என்னை பார்த்து பொறாமை படாதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், டைவோர்ஸ் பத்தி தெரியாமல் எதையும் பேசாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *