பட வாய்ப்புக்காக இவரும் இப்படி இறங்கிடாரே.‌.!! கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ரித்விகா!!

பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரித்விகா.இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரையுமே கவர்ந்தார்.பின்னர் ரித்விகா பல படங்களில் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.

இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை உள்ள கல்லூரியில் முடித்தார். பின்னர் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார்.இதைத் தொடர்ந்து இவருக்கு பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படம் தோல்வியை தழுவினாலும் இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது.

இதையடுத்து ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்விகா. ஆனாலும் பெரிய படங்களின் வாய்ப்பு குறைவாக தான் இருந்தது. பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். இவரின் டார்ச் லைட் படம் வெளியாகி
ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது,எம் ஜி ஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அதிகமான படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் தனது இடத்தை தக்கவைத்து கொள்ள
கவர்ச்சியான போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்புக்காக இவரும் இப்படி ஆகிவிட்டாரே என்று கவலையில் இருக்கிறார்கள்.

Click  அமெரிக்காவால் தமிழ் பெண்கள் ஆடிய நாடன் ! தமிழ் பாடலுக்கு அமெரிக்காவால் தமிழ் பெண்கள் !

Leave a Reply

Your email address will not be published.