யார் இந்த பேபி நயன்தாரா..?? ஓவர் நைட்டில் வைரலாகும் போட்டோஸ்.!! நீங்களே பாருங்கள்

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா சக்ரவர்த்தி.இவர் மலையாளத்தில் கிலுக்கம் கிலுகிலுக்கம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவயை பேபி நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இவர் 2002 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.பின்னர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் தமிழில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா நடிப்பில் வெளியான குசேலன் படத்தின் மூலம் அறிமுகமானார் நயன்தாரா.இவர் மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் போன்ற தென் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களுடன் முப்பதுக்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் அதிகமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் அதிகமாக மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.இவர்
தி சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி சில்க்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர மடலாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் மாஸ் கம்யூனிகேஷன் ஜர்னலிசம் முதலாமாண்டு படித்து வருகிறார்.இவருக்கு தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.அதனால் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவரின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  கொரோனா ஊரடங்கில் காதலியை கரம்பிடித்த கும்கி நடிகர்.! திரையுலகினர் வாழ்த்து.!!

Leave a Reply

Your email address will not be published.