ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வெல்லாத நாடுகள் பற்றி தெரியுமா? வெளியான பட்டியல்

ஜப்பான தலைநகர் டோக்கியோவில்
ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஒலிம்பிக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை பதக்கங்களே வெல்லாத நாடுகளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பங்களாதேஷ்
கடந்த சில ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் வங்கதேசம் பங்கேற்று வருகிறது. பதக்கங்களை வெல்வதற்காக வங்கதேசமும் போராடி தான் வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா
ஆன்டிகுவா மற்றும் பார்புடா 1976 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இது குறைந்த மக்கள் கொண்ட நாடாகும். ஆனால் இந்த நாடும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை.

அல்பேனியா
இந்த நாடும் பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றது.
இந்த நாட்டில் மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல் மற்றும் பளுதூக்குதல் போன்ற ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த நாடும் இதுவரை ஒரு பதக்கங்களை கூட வெல்லவில்லை.

பூட்டான்
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமான தடகள வீரர்களை களமிறக்கியது பூட்டான் நாடு. ஆனால் இன்று வரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை பதக்கங்களையும் வென்றதில்லை.

மியான்மர்
முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்டது மியான்மர்.மியான்மரில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வருகின்றனர்.ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள அரசியல் குழப்பம் மற்றும் நாட்டில் வசதிகள் இல்லாததால் வீரர்களின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு இன்று வரை பதக்கங்கள் வெல்லவில்லை.

காங்கோ
வங்கதேச நாட்டிற்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு காங்கோ ஆகும்.இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை.

ருவாண்டா
1984 உம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றூ வருகிறது. அதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 7 அணிகள் நீச்சல், குறுக்கு நாடு, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் டிராக் நிகழ்வுகளில் பங்கேற்றது இருப்பினும் எந்த பதக்கமும் இல்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் முதல் சர்வதேச பதக்கத்தை வென்றது.

Click  சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. 1992 ஆம் ஆண்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இந்த நாடுகளின் சார்பில் பங்கேற்றனர். ஆனால் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை வெல்லாத 50 முதல் 60 நாடுகள் உள்ளன.
இதில் பெலிஸ், சாட், தெற்கு சூடான், துர்க்மெனிஸ்தான், சியரா லியோன் மற்றும் சோமாலியா போன்ற பல நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published.