தமிழ்நாடு முதல்வரின் ராஜதந்திரம் வாருங்கள் அதை பற்றி பாப்போம்!

திருச்சியில் அரசு ஆய்வுக்கு சென்றவர் திடீரென காரிலிருந்து இறங்கி சுமார் 7 கிலோமீட்டர் அளவிற்கு நடக்க தொடங்கினார் சுமார் 6 கிராம மக்களிடம் உரையாடிக் கொண்டே சென்றார் முதல் கிராமத்தில் நடந்த சுவாரசியத்தை பாருங்கள்.எதிரில் ஒரு பெண்மணி தண்ணீர் குடத்தை தலையில் வைத்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார் அம்மணி எங்கிருந்து இருந்து தண்ணீர் கொண்டு வருகிறீர்கள் என முதல்வர் கேட்கிறார் அந்தப் பெண்மணிக்கு திடீரென என்ன சொல்வதென்றே தெரியவில்லை நமது மாவட்டம் முழுவதும் காவிரி ஓடினாலும் எங்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது ஐயா என அந்த பெண்மணி வருத்தப்படுகிறார் உடனடியாக மாவட்ட தாசில்தாரை கூப்பிடுகிறார் இந்த அம்மா என்ன சொல்ல வருகிறார் எனக்கு புரியவில்லை என கேட்கிறார் அதற்கு தாசில்தார் மூன்று கிராமங்களை இணைக்கும் குடிநீர் பைப்பு பதித்து கொண்டிருக்கிறோம் இன்னும் இரண்டொரு நாட்களில் இந்த கிராமத்திற்கு நல்ல தண்ணீர் கொடுத்து விடுவோம் என சொல்கிறார் உடனே முதல்வர் தலையிட்டு இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த கிராமத்திற்கு தண்ணீர் விடவேண்டும்
என உத்தரவிடுகிறார் இரண்டாவது கிராமத்தில் சுமார்10 பெரியவர்கள்அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் நமது முதல்வரை பார்த்தவுடன் நின்றார்கள் அவர்களிடம் சென்ற முதல்வர் எதற்காக என்னை பார்த்தவுடன் ஏன் நிற்கிறீர்கள் முதலில் அமருங்கள் என சொல்கிறார் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா முதலில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டீர்களா என நலம் விசாரிக்கிறார் அனைத்து பெரியவர்களும் ஒரே குரலில் ஐயா நாங்கள் உங்களுடைய ஆட்சியில் நலமாக இருக்கிறோம் ஆனால் ஒரே ஒரு குறை எங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் இதுவரை கிடைக்கவில்லை திமுகவினர் ஆட்சியிலிருந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்அவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் கேட்டார்கள் எங்களால் கொடுக்க முடியவில்லை ஆனால் உங்களுடைய ஆட்சியில் நாங்கள் ஆபீஸ் ஆபீஸ் ஆக அலைகிறோம் எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என சொல்கிறார்கள்.உடனடியாக மாவட்ட கலெக்டரை அலைகிறார்.ஏன் இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க வில்லை என கேட்கிறார்
நமது முதல்வர். ஐயா இவர்களைப் பற்றி விசாரிக்க கிராம அதிகாரிக்கு உத்தரவிட்டு இருக்கிறேன் அவர் விசாரித்து அறிக்கை கொடுத்தவுடன் இவர்களுக்கு உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்கிறேன் ஐயா என சொல்கிறார் மாவட்ட கலெக்டர். ஓ அப்படியா இதே இடத்தில் விசாரித்து இன்னும் பத்து நிமிடங்களில் இவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என அதே இடத்தில் அவர்களுடன் அமர்ந்து விட்டார் நமது முதல்வர்.மூன்றாவது கிராமத்தில்
சில மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களிடம் சென்று உங்களுக்கு அடிப்படை வசதிகள் இங்கே கிடைக்கிறதா அம்மா என கேட்கிறார் நமது முதல்வர்.

அவர்கள் ஐயா எங்களுக்கு கழிவறை வசதி இங்கே இல்லை நாங்களும் இரவில் மறைவான இடங்களை தேடி அலைகிறோம்

என சொல்லுகிறார்கள்
அந்த மாணவிகள் உடனே அந்த கிராம நிர்வாக அதிகாரியை அழைக்கிறார் ஏன் இவர்களுக்கு இதுவரை கழிப்பறை கட்ட வில்லை என கேட்கிறார் அந்த கிராம அதிகாரி இன்னும் இரண்டு வாரங்களில் இந்த கிராமத்திற்கு கழிவறை கட்டித்தரப்படும் என்று சொல்கிறார்.இதுவரை ஏன் கட்டவில்லை என்று கேட்கிறார் முதல்வர்.இங்கிருக்கும் எதிர்கட்சி எம்எல்ஏ அந்த நிதியை இதுவரைக்கும் எங்களுக்கு தரவில்லை என சொல்கிறார்.ஓ அப்படியா சரி அந்த தொகை எவ்வளவு என சொல்லுங்கள் என்னுடைய பணம் இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன் என அதே இடத்தில் காசோலையில் கையொப்பம் இட்டு தருகிறார் நமது முதல்வர் 7 நாட்களுக்கு பிறகு இந்த இடத்தை காணொளியில் நான் காணும் பொழுது கழிவறை இருக்கவேண்டுமென.உத்தரவிடுகிறார் நமது முதல்வர்.இப்படி பொது மக்களுக்கு நண்பனாக
மாணவிகளுக்கு ஒரு ஆசானாக
நமது முதல்வர்.எந்த விளம்பரமும் இல்லாமல் எந்த ஊடகத்திற்கும் தெரியாமல் இவ்வளவு சாதனைகளை நமது முதல்வர் செய்தார்.சிலர் கேட்கலாம்அரசு பணத்தை எடுத்து செலவு செய்வது சாதனையா என்று. அப்படி இல்ல.

        நமக்கு நாமே என ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொண்டு கலர்கலராக டிரஸ் மாற்றிக் கொண்டு அலைவது அல்ல சாதனை,.....தான் இருக்கும் பொழுதே மக்களுக்கு அனைத்தும் சேர வேண்டும் என நினைப்பவன் தான் உண்மையான தலைவன்.

நமது முதல்வர் எடப்பாடியார்…..

Click  இந்த ஊரடங்கில் இந்திய மக்கள் அதிகமாக எதை தேடினார்கள் தெரியுமா ? கூகுள் வெளியிட்ட பட்டியல் ! வித்தியாசமானவர்கள் இந்தியர்கள் !

Leave a Reply

Your email address will not be published.