நந்தினி சீரியலில் நடித்த கங்காவுக்கு இவ்வளவு அழகான தங்கையா..!! வைரல் புகைப்படங்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இவர் 1990 ஆண்டு கர்நாடகவில் பிறந்தார். இவர் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். பின் சில காலம் அந்த துறையில் பணியாற்றினார்.ஆனால் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்புத்துறைக்கு வந்தார்.

இவர் ஜீ கன்னட டிவியில் ஒளிபரப்பான  பென்கியல்லி அரலிடா ஹீவு என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில் ஷாலினி என்ற காதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து முது பிடா என்ற தெலுங்கு சீரியலில் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

முட்டு மனசே என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக அரு கவுடா என்ற நடிகர் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து
பெற்று கொண்டனர். சமீபத்தில் நித்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அடுக்களையில் பணியுண்டு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரட்சிதா ராம் என்ற சகோதரி உள்ளார். இவர் 20 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இதுவரை தமிழ் பக்கம் தலைகாட்டாத ரட்சிதாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  என்ன shape-u டா !! பிரியா ஆனந்த் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.