பசங்க படத்தில் நடித்த சோபிகண்ணா இது..!! மாடர்ன் உடையில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

வேகா தமோடியா கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1985
ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்தார்.ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் வளர்ந்தார்.பின் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து முடித்தார்.

பிறகு சரோஜா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.அதன் பிறகு இவர்
பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படத்தின் மூலம் பிரபலமானார்.
பசங்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப் பெரிய வெற்றி பெற்றது.இதுமட்டுமல்ல தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வேகா தமோடியா.

இந்த திரைப்பட த்தில் சோபிகண்ணு
என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக
தனது நடிப்பை வெளிப்படுத்திருந்தார். 


இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜெய் கங்காதால் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இவர் சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் மாடர்ன் பெண்ணாக இருக்கும் வேகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சோபி கண்ணா இது என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.