ஒரு கதை சொல்லட்டுமா சார்.. சிம்புவை இயக்க தயாராகும் சசிகுமார் :யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.!!
தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சசிகுமார்.
சசிகுமார் தளபதி விஜய் கூட்டணியில் படம் எடுக்கப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு இப்பொழுது சாத்தியம் இல்லையாம்.
தற்போது இன்னும் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால் சுப்பிரமணியபுரம் போல் கிராமத்து ரவுடி கதையை இயக்கப் போவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் அல்லது யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளனர்.

சிம்புவுடன் சசிகுமார் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சசிகுமார் 2008-ல் சுப்பிரமணியபுரம் மற்றும் 2010-ல் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதில் ஈசன் தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் சசிகுமார் ஒரு முழு டைரக்டர் என்பதை சுப்பிரமணியபுரம் படத்துலேயே நிரூபித்து உள்ளார்.
இவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு, எம்ஜிஆர் மகன் போன்ற படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் சிம்பு படம் வேறு.