ஜானகி அம்மா நலமாக உள்ளார்.!!

பிண்ணணி பாடகி ஜானகி காலமானார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி.

பின்னணி பாடகி ஜானகி வதந்தி குறித்து மகன் விளக்கம் …

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் வதந்திக்கு அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பழம்பெரும் பாடகி ஜானகி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் கூட ஒரு சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

அறுவை சிகிச்சைக்கு பின் ஜானகி அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளியாகி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜானகியின் மகன் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது தாயார் உடல்நிலை குறித்து தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Click  ஷிவானியை பதம் பார்த்த ஹவுஸ்மேட்ஸ் 'நான் எந்த கேம் பிளானோடும் வரல'

Leave a Reply

Your email address will not be published.