றெக்க படத்தில் வரும் மாலாக்காவா இது..!! மாடர்ன் உடையில் செம்ம ஹாட் போஸ்!!

சிஜா ரோஸ் கோழிகூவுது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார்.பின்னர் மாடலிங் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு மகடி என்ற
கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதே ஆண்டு மலையாளத்தில் ஹாஸ்டல் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.பின்னர் இவர் விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் சிஜா ரோஸ் நடித்து இருந்தார்.மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டார் நடிகை சிஜா ரோஸ்.

தற்போது தமிழில் கசட தபற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.அந்த வகையில் தற்போது சிஜா ரோஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம மாலா அக்காவா..!! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published.