சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்..

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசியி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தந்தை,மகன் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருவரின் உயிரிழப்புக்கும் காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கக் கோரி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்ளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மரணமடைந்த தந்தை மற்றும் மகனின் குடும்பத்தினருக்கு அனைவரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜ் மற்றும் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த தகவலை திரைப்பட தயாரிப்பாளர் கராத்தே தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Click  சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் ஃபெனிக்ஸ் மரணம் : இளம் நடிகை மனித உரிமை ஆணையத்தில் புகார்.

Leave a Reply

Your email address will not be published.