நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த மனைவி

நடிகை வனிதா விஜயகுமாருக்கும், இயக்குநர் பீட்டர் பாலுக்கும் இடையே சமீபத்தில் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 மாத காதலின் விளைவாக நேற்று கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

ஊரடங்கு காரணமாக திருமண நிகழ்ச்சியில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

திருமணபுகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை கவர்ந்தன. அதில் வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது.

இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் அவர்கள் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார்.

புகாரில் “தனக்கும், பீட்டர் பாலுக்கும திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”

“எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. முறையாக விவாகரத்து பெற்ற பிறகே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் பால் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆயினும் விவாகரத்து பெறாமேலேயே பீட்டர்பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

“இது என்னப்பா வனிதாவுக்கு வந்த சோதனை கல்யாணம் ஆன மறுநாளே பிரச்சனையா” என்று சிலர் கேட்க தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *