ஹாலிவுட் தரத்தில் அதிரடி காட்டும் விஷால்..4 மொழிகளில் வெளியானது தரமான சக்ரா டிரைலர்.!!
ஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்தும் சக்ரா டிரைலர் ஹாலிவுட் தரத்தில் அதிரடி காட்டும் விஷால்.

கடந்த சில வருடங்களில் வந்த விஷாலின் படங்களில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்கள் தான் பெயர் சொல்லும் அளவுக்கு இருந்தது.
இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சக்ரா. ஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

இந்த படத்தை பெரிய அளவில் பிரமோட் செய்வதற்காக நான்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறாராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளிவர உள்ளது.
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.