நடிகை வனிதாவின் 3 ஆவது திருமணம் திட்டமிட்டபடி இன்று நடந்து முடிந்தது !!

தனது மூன்றாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி கிறிஸ்டின் முறைப்படி திருமணத்தை நடத்தியது மற்றும் திருமணம் செய்ய மோதிரங்கள் மற்றும் திருமண சபதங்களை பரிமாறிக்கொண்டது.

அவர்கள் திருமணத்தின் சிலபுகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடிகை வனிதாவின் திருமண தேதி பெற்றோர்களான மஞ்சுளா – விஜய்குமாரின் திருமண தேதி.

முன்னதாக, வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் ஒருவருக்கொருவர் பெயரை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பரில் ஒரு திட்டத்தின் கலந்துரையாடலுக்காக அவரும் பீட்டர் பாலும் சந்தித்ததாகவும், ஊரடங்கின் போது அவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள் என்றும் வனிதா தெரிவித்தார்.

மேலும் தனது மகள்கள் ஒப்புதல் அளித்த பின்னரே திருமணம் செய்வேன் என்று அவர் கூறியதையும் நிறைவேற்றினார்.

இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா..

COVID-19 கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலம் என்பதால் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்..

Click  விக்ரம் படத்தில் நடித்த ஸ்வாதிஷ்டா வா இது..!! போட்டோல சும்மா கும்முன்னு இருக்காங்களே!!

Leave a Reply

Your email address will not be published.