200 சதவீதம் சம்பளத்தை உயர்த்தியது மத்திய அரசு ! எல்லையில் பணிகள் தீவிரம்! எவ்வளவு சம்பளம் தெரியுமா ?

இந்தியா தனது எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிவருகிறது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதா வேகத்தில் இந்தியா தனது எல்லைகளை பலப்படுத்திவருகிறது . எல்லைகளில் சாலைகள்
 
200 சதவீதம் சம்பளத்தை உயர்த்தியது மத்திய அரசு ! எல்லையில் பணிகள் தீவிரம்! எவ்வளவு சம்பளம் தெரியுமா ?

இந்தியா தனது எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிவருகிறது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதா வேகத்தில் இந்தியா தனது எல்லைகளை பலப்படுத்திவருகிறது . எல்லைகளில் சாலைகள் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துள்ள நிலையில் .

இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் சீனாவுக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்பதால் சீனா நமது எல்லைகளில் அத்துமீறி இந்த பணிகளை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது ஆனால் எதற்கும் அசராத இந்தியா தொடர்ந்து வேகமாக சாலைகளை அமைத்து வருகிறது .

லடாக் , டோக்லாம் , அருணாச்சல பிரதேசம் , சிக்கிம் உள்ளிட்ட இடங்கள் பதற்றமான இடங்களாக உள்ள நிலையில் அந்த பகுதிகளில் அதிவிரைவாக சாலைகளை அமைத்துவருகிறது இந்தியா . இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மிகவும் ஆபத்தான சூழல் வேலை செய்து வருகிறார்கள்

அதனால் அவர்களின் துணிவையும் நாட்டிற்காக அவர்கள் செய்யும் செயலையும் ஊக்குவிக்கும் வகையில் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் சம்பளத்தை 100 முதல் 200 சதவீதம் அதிகரித்து தேசிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு கழகம் அறிவித்துள்ளது .

இதனால் சாதாரண டேட்டா என்ட்ரி வேலை செய்பவர்கள் இதுவரை 16,770 சம்பளமாக வழங்கப்பட்டது இனி அது 41,440 ஆகா மாற்றப்படுகிறது . 30,000 சம்பளம் பெற்ற சிவில் என்ஜினீயர்கள் சம்பளம் 60,000 மாக மாற்றபட்டுள்ளது .

அங்குள்ள மேலாளர்கள் இதுவரை வாங்கிய 55,000 ஆயிரம் சம்பளம் 112,000 ஆக உயத்தப்பட்டுள்ளது . மற்ற பணியாளர்களுக்கும் அவர்கள் இதுவரை பெற்ற சம்பளம் 2 மடங்குக்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ளது . இந்த நடைமுறை இந்த மாதம் முதலே அமலுக்கு வருகிறது

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வழங்கவிருக்கும் இந்த மாதம் சம்பளத்திலேயே இந்த மாற்றம் செய்யப்படுகிறது . மேலும் அவர்களுக்கு 5 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் மற்றும் 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகிறது . இது எல்லை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Tags